Wednesday, 27 January 2021

 

விடுதலை நாளையும்

குடியரசு நாளையும்

தேசியக் கொடி ஏற்றுவதையும் 

புறக்கணிப்பவன் தேசத்துரோகி ....


- காவிகள் & காங்கிரஸ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஆனால்.


விடுதலை நாளையும் 

தேசியக் கொடியையும்

"தந்தை பெரியாரைப் போன்றே "


புறக்கணித்த காந்தி

தேசத்தந்தை?


தந்தை பெரியார்

தேசத்துரோகி ?


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இன்னொரு செய்தி........


காந்தியும் தந்தை பெரியாரும்

தம் வாழ்நாளில்

#தேசியக் #கொடியைக்

#கையால்கூடத் #தொட்டதில்லை.

ஏற்றவும் இல்லை.


அவர்கள்மறைவுக்குப் பின்தான்

தேசியக் கொடி அவர்களின்

உடல் மீது போர்த்தப்பட்டது.

கலைஞரின் சாதனைகள்





🌅🌅🌅தலைவர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ? 🌅🌅🌅


1. #போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்


2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்


3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்


4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் #சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்


5. தமிழ்நாடு #குடிசை மாற்று #வாரியம் அமைத்தது கலைஞர்


6. #குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்


7. முதலில் இலவச #கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்


8. பிச்சைகாரர்கள் #மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்


9. #கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து #இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்


10. இலவச கான்கிரீட் #வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்


11. #குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்


12. இந்தியாவிலே முதன் முதலில் #காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்


13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென #துறை அமைத்தது கலைஞர்


14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான #அமைப்பை அமைத்தது கலைஞர்


15. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோர்  - 31%, தாழ்த்தப்பட்டோர்  - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்


16. புகுமுகவகுப்பு வரை #இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்


17. #மே 1, #சம்பளத்துடன் கூடிய பொது #விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்


18. வாழ்ந்த மனிதரான #நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்


19. முதல் #விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்


20. #அரசு #ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்


21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்


22. #மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்


23. கோவில்களில் குழந்தைகளுக்கான " #கருணை #இல்லம் " தந்தது கலைஞர்


24. சேலம் #இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்


25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்


26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்


27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்


28.சிட்கோ  (SIDCO) உருவாக்கியது கலைஞர்


29. சிப்காட் (SIPCOT) உருவாக்கியது கலைஞர்


30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்


31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர் 


32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்


33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்


34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்


35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்


36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்


37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


40. மிகபிர்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்


41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்


42. தாழ்த்தப்பட்டோருக்கு #இலவச #கல்வி தந்தது


43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்


44. சொத்தில் #பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்


45. அரசு வேலை வாய்ப்புகளில் #பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்


46. ஆசியாவிலே முதன் முறையாக #கால்நடை மற்றும் #விலங்குகள் அறிவியல் #பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்


47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்


50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்


51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்


52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்


54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்


57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்


58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்


59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு


60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்


61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்


62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்


63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்


64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்


65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்


66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்


67.அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்


68.தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்


69.செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்


70.சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்


71.பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்


72.#விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் #பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)


73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர். #விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)


74.ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.


75.#நன்றிக் கடனாக, #சரியான(தேர்தல்) நேரத்தில், பழி #கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை #படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள்.


76.. ஈழக் கொடி பிடிக்கும் #விசமிகள், ஈழத்திற்கு செய்தது என்ன??? கலைஞர் போல பதவி துறந்தார்களா???(ஈழத்தமிழர் நலனுக்காக, அன்றைய மத்திய மாநில அரசுகளின் நிலையை எதிர்த்து, #1983ல் #கலைஞரும், பேராசிரியரும் பதவியை #ராஜினாமா செய்தனர்) ஆட்சி இழந்தார்களா???(1991ல், விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறது, நாட்டின் இரகசியங்களை பாதுகாக்கத் தவறி விட்டது தமிழக அரசு என்று கூறி அன்றைய கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது)


77. #காமராசரை போற்றிப் புகழும் மக்களுக்கு, அக் கர்மவீரர் காமராசரை கைது செய்ய முடியாது என்று கூறி, அவசர நிலையை சந்தித்து, 1975ல்ஆட்சி இழந்தவர் கலைஞர். நினைத்திருந்தால், இந்திராவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, காமராசரை கைது செய்து, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் கலைஞர்.


#ஆரியர்கள் கலைஞர் ஆட்சியை எதிர்ப்பதில் இருந்தே தெரியவில்லையா, கலைஞர் நமக்காக என்ன செய்தார் என்று ?


இன்று கலைஞருக்கு இத்தனை வசைப்பட்டங்கள் சூட்டும் பக்கிகள், அவரின் தியாகங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியதேன்?

புலால் மறுத்தல்

 ஊன் உண்ணுதலைத் 

தவிர்க்க வேண்டும்

என்பதை உடல் நலம் பேணுபவர் 

கடைப்பிடிக்க வேண்டும்


பேராசான் திருவள்ளுவரும் 

இதனை புலான்மறுத்தல் என்கிற 

அதிகாரத்தில் (26) வலிமையாக 

வலியுறுத்தியுள்ளார்


ஆனால், உலக மக்களில், 

புலான்மறுத்தலைக் 

கடைப்பிடிப்பவர்கள் 

மீச்சிறுபான்மையினர்தான்.


எனினும், தற்காலத்தில்

அகவை முதிர்ந்தவர்கள்

செரிமானக்கோளாறு காரணத்தால்,

புலால் உண்ணுதலைக்

கைவிட்டுவிடுகிறார்கள்.

அவர்களை வணங்கி

வாழ்த்துவோம்


இன்று பேரருட்பேரொளி

அருட்பிரகாச வள்ளற்பெருமான்

இறைவனுடன் தம்மை 

ஆட்படுத்திக்கொண்ட

தைப்பூசத் திருநாள்.


பேராசானுக்குப்பின், 

புலான் மறுத்தலை

வலியுறுத்தியவர் 

பேரருட்பேரொளி

வள்ளற்பெருமான் ஆவார்.


இந்நாளில், புலான் மறுத்தலை 

நாம்அனைவரும் கடைப்பிடிப்போம்

என்று உறுதியேற்பதே

வள்ளுவப் பெருந்தகைக்கும்.

வள்ளற்பெருமானுக்கு நாம் செலுத்தும்

பெருநன்றிக் கடனாகும்.


//கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உலகும் தொழும் .

= #பேராசான்_வள்ளுவர்//


//கங்கையிற் படிந்திட்டாலும்

கடவுளைப் பூசித்தாலும்

சங்கையில்லாத ஞான 

சாத்திரம் உணர்ந்திட்டாலும்


*மங்குல்போல் கோடி தானம்

வள்ளலாய் வழங்கிட்டாலும்

பொங்குறு #புலால்_புசிப்போன்

போய் நரகு அவைவன் அன்றோ !

= #பேரருட்பேரொளி_வள்ளலார்.


* மங்குல் = வானம்


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சோம.நடராசன்,

தை 15,2052

28.1.2021

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥



Thursday, 12 November 2015

மழை நிவரணம் வயிற்றெரிச்சல்
*************************************************

இந்தமழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல்பார்த்துக்கொள்ள வேண்டிய தலையாய கடமையிலிருந்து தவறிய அரசை.அரசுத்தலைமையைக் கண்டிக்கத்திராணியற்ற கோணல் பார்வைத் தினமணி விபத்ததாலும் மழையாலும் பாதிக்ககப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு  4 லட்சம் வழங்குவதைத் தடுக்கும் விதத்தில் தலையங்கம் எழுதியிருக்கிறது(12-11-15)

மழையால் ஊயிரிழப்பு எப்பபடி நேர்ந்தலும் அது "மழை நோயால்"நிகழ்ந்தாலும்இழப்புதான்.அதற்கு நிவாரணம் தருவதில் பாகுபாடு பார்க்கவேண்டும் என்கிறது தலையங்கம்.

கொடநாட்டு பங்களாவில் ஆட்சிநடத்த 50 கோடி செலவாகியுள்ளதே அதைக் கண்டுகெள்ளாத தினமணி உயிரிழப்பு நிவாரணத்தில் மட்டும்"அரசு நிர்வாகம் கவனமாக இருக்கவேண்டும்" என்று செத்தவர்கள் குடும்பத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறது இந்தக் கூறுகெட்ட தினமணி.
********************************

Tuesday, 10 November 2015

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் பிறந்தநாள் நவம்பர் 11(1899)
*********************************************************************************

சங்கப் புலவர்கள் எண்ணிக்கையை ஒத்த  49 புலவர்களைக் கொண்டு புலவர் குழுவை உருவாக்கினார்.

தமிழக வானொலியில் "ஆகாஷ்வாணி"யை விரட்டியடித்தார்.

வானொலியில் "ஸ்ரீ" "திரு"வைக் குடிபுக வைத்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம்  தோன்ற வித்தாய் அமைந்தார்.

ஆண்டு முழுவதும் 365 நாட்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தமிழை வளர்த்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழிசைப் போராட்டம் தனித்தமிழ் இயக்கப் போராட்டம் என பல போராட்டங்களுக்குத் தளபதியாய் நின்று போராடினார்.

ஆயிரக்கணக்கில் தமிழ்முறைத் திருமணங்களை நடத்திவைத்தார்.

இயற்கை மருத்துவம் உள்ளிட்ட 25 நூல்களை எழுதியுள்ளார்.

******************************************

Monday, 9 November 2015

இன்று
*********
"ஜனசக்தி" நாளிதழ் பிறந்த நாள் நவம்பர் 7(1937)
********************************************************************

பகுத்தறிவு,அறிவியல்,பொதுவுடைமைத் தத்துவங்களை பொதுமக்களிடையே -குறிப்பாக உழைக்கும மக்களிடையே பரப்புவதற்காகவும் அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறப் பாடுபடுவதற்காகவும் தொடங்கப்பட்டது ஜனசக்தி.

இதன் முதல்ஆசிரியர் பகுத்தறிவுப் பொதுவுடைமைப் பேராசான் தோழர் ப.ஜீவானந்தனார்.

1942ல்தான் இது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஏடாக மாற்றப்பட்டது.

20-11-1937ல் ஜனசக்தி நாளேட்டில்தான் பாவேந்தரின் புகழ்பெற்ற புரட்சிப்பாடல்களில் ஒன்றான இந்தப்பாடல் வெளியாயிற்று:

புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்

பொதுவுடைமைக் கொள்கை திசைஎட்டும் சேர்ப்போம்
  புனிதமேடதை எங்கள் உயிரெனக் காப்போம்.

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதெனும்ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனியெனும் மனிதரைச் சிரிப்போம்

இயல்பொருள் பயன்தர  மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாமெனில் அனைவரும் புசிப்போம்

பாவேந்தர் பாரதிதாசன்(ஜனசக்தி/20-11-1937)

*********************************************************************

Sunday, 8 November 2015

Mr. Sowmianarayanan:> what  you  have recorded quoting  'MANU'  may  or  may not be  true.But  your  quotation that  "PURNANOORU" is lenient  to  PARPANAR is utter false.

What  PURNANOORU  refers  is  not  PARPANARS. Wherever  PARPPANAR  appears in PURANANOORU and  other  SANGAM scriptures  it is an isertion  replacing  "KURAVAR" which  means  TEACHER(AASAAN).

Now  I  am  quoting MANU'S  sutra down below:

"மௌண்யம் ப்ராணாந்தி கோதண்டா
 ப்ராஹ்மணாம்  வீதீயதே
இதரோஷாம்து  வர்ணானாமதண்ட:
  ப்ராணாத்தி  கோபவேதே"
 
இதன்  பொருள்:  கொலைத்  தொழில் புரிந்த மற்ற வருணத்ததார்களைத் தூக்கிலிடவேண்டும்.

ஆனால்   :பிராமணன் இத்தகைய  குற்றம் புரிவானாயின்
                   அவனது  தலைமயிரை மொட்டை
                                       அடித்தலே தண்டனையாகும்
இதுதான்  மநுதர்மம்
                                                ******************************************************
You  know  Sankaran was let  off  in  Sankara Raman's  murder case based on MANU'S  Doctrine.

And now  as  I  Have already predicted  UCCHIK KUDUMI COURT  delivered its  judgement following  manu's  DOCTRINE  in  "J"'s  case..